உலகம்

இந்தோனேசியாவில் 4 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

DIN


இந்தோனேசியாவில் புதிதாக 4,029 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,00,483 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் புதன்கிழமை புதிதாக 4,029 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 100 பேர் பலியாகினர். 3,545 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதைத் தொடர்ந்து, அங்கு கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 13,612 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,25,793 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

அங்கு அதிகபட்சமாக ஜகார்த்தாவில் 1,02,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,188 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கிழக்கு ஜாவாவில் 51,506 பேரும், மேற்கு ஜாவாவில் 34,745 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT