கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்காவில் ஒரேநாளில் 91,295 பேருக்கு கரோனா தொற்று; 1,024 பேர் பலி

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 89.4 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நாள் ஒருநாள் பாதிப்பு 88,973 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228,625 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,024 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் பொதுத்தேர்தலையொட்டி, அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருவது தொற்று அதிகமாவதற்கு ஒரு காரணம் என்றும் பல்கலைக்கழகம் விளக்கம் தெரிவித்துள்ளது. 

அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 58 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தொலைநிலைக் கல்விச் சோ்க்கை செப். 15 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT