உலகம்

6 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை: பிரிட்டன் அரசு திட்டம்

பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்க அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டுள்ளார்.

DIN

லண்டன்: பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்க அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் கணிசமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாம் உடனடியாக செயல்பட்டாக வேண்டும். எனவே, சமூகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை நாம் எளிமையாக்கவும், வலிமைப்படுத்தவும் வேண்டும். 
கரோனா தடுப்புக்கான சட்டதிட்டங்களை பொதுமக்கள் புரிந்து கொள்வதும், அவற்றைப் பின்பற்றி நடப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கரோனா அறிகுறிகள் இருந்தால் உரிய பரிசோதனை செய்து கொள்தல் ஆகியவற்றை பொதுமக்கள் தவறாமல் செய்ய வேண்டும் என்றார் அவர்.
நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் 6 பேருக்கு மேல் குழுமக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், தற்போது 30 பேருக்கு மேல் கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் போலீஸôருக்கு அதிகாரம் உள்ளது. புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், 6 பேருக்கு மேல் கூடினால் கூட அவர்கள் மீது போலீஸôரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT