உலகம்

46 ஆண்டுகளில் 68% குறைந்த வன உயிர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

DIN

உலக அளவில் 1970ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உலகளாவிய வன உயிரினங்களின் எண்ணிக்கை 68% குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் உலக வனவிலங்கு அமைப்பு (டபிள்யூ.டபிள்யூ.எஃப்) மேற்கொண்ட ஆய்வில் உலக அளவில் குறையும் வன உயிர்களின் எண்ணிக்கையானது மனித வாழ்வில் ஏற்படுத்தும் அபாயகரமான விளைவுகளுக்குக் காரணமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

வன உயிர்களின் அழிவானது மனித வாழ்வின் ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ள இந்த ஆய்வு 1970ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை உலகில் 68% வன உயிர்கள் அழிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இதேகாலத்தில் நன்னீர் வாழ்விடங்களில் காணப்படும் உயிர்களின் எண்ணிக்கை 84 சதவீதம் சரிவை சந்தித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வனவிலங்கு இனங்களின் தீவிர வீழ்ச்சியானது புவியின் இயற்கைச் சூழலை பாதிக்கிறது. நமது பெருங்கடல்கள் மற்றும் ஆறுகளில் உள்ள மீன்களிலிருந்து, பூக்களில் விளையாடும் தேனீக்கள் வரை நமது விவசாய உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனவிலங்குகளின் வீழ்ச்சியானது ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு, நோய்த்தொற்று உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது, "என்று  உலக வனவிலங்கு அமைப்பின் இயக்குனர் மார்கோ லம்பெர்டினி தெரிவித்துள்ளார்.
 
“கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில்,உலகெங்கிலும் உள்ள பல்லுயிர் மற்றும் வனவிலங்குகளின் இழப்பைத் தடுத்து நிறுத்தவும், நமது எதிர்கால ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கையை எடுப்பது முன்பை விட இப்போது மிக முக்கியமானது.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மனித சமூகத்தால் மேற்கொள்ளப்படும் காடழிப்பு வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக்காரணமாக உள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு உற்பத்தியில் தேவையான மாற்றங்கள் செய்வது மற்றும் வர்த்தகத்தை மிகவும் திறமையாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலையானதாக மாற்றுவது, கழிவுகளை குறைப்பது, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருப்பது ஆகியவை அழிந்த இயற்கை சூழலை மீட்க உதவும் என ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT