உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 9,19,718 ஆக உயர்வு

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,19,718 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,86,59,798 கோடியை எட்டியுள்ளது. 

உலக நாடுகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,86,59,798 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,19,718 ஆக உள்ளது. கரோனா பாதித்து 2,05,86,407 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 66,36,247 பேரும், இந்தியாவில் 46,59,984 பேரும், பிரேசிலில் 42,83,978 பேரும், ரஷியாவில் 10,51,874 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. 

தற்போது 71,53,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,895 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT