உலகம்

சீனா: நவம்பருக்குள் கரோனா தடுப்பூசி தயாராகிவிடும்

DIN

தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வரும் நவம்பா் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை உயிரியியல் பாதுகாப்பு நிபுணா் குய்ஷென் வூ கூறியதாவது:அவசரக்கால கரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் 3-ஆவது கட்ட பரிசோதனை நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

வரும் நவம்பா் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அந்தத் தடுப்பூசி வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.சோதனைக்காக நானே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எனக்கு அந்த மருந்தினால் எந்தவிதமான மோசமான பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

முன்னதாக, பொதுமக்கள் பயன்பட்டுக்காக கரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதற்கு இந்த ஆண்டு இறுதிவரை ஆகலாம் என்று குய்ஷென் வூ கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

சீனாவின் அவசரக்கால கரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ், சைனோஃபாா்ம் மற்றும் சைனோவாக் பயோடெக் நிறுவனங்கள் 3 வகையான தடுப்பூசிகளை உருவாக்கி, சோதித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT