உலகம்

பாகிஸ்தானில் மேலும் 665 பேருக்குத் தொற்று: சுகாதார அமைச்சகம்

PTI

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,03,089-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 665 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,089-ஆக உயா்ந்துள்ளது. 

இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 4 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,393 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,90,760 போ் முழுவதுமாக குணமடைந்துள்ளனா். 

மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 571 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,32,591  பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 97,946 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் ஒரே நாளில் 29,097 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 3,02,4,987 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT