உலகம்

சீனா - நேபாள எல்லையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

DIN

சீனா - நேபாளம் இடையேயான எல்லைப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசுவகதி-கெருங் எல்லைப்பகுதி மூடப்பட்டிருந்த நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சீனா - நேபாளம் இடையிலான எல்லைப்பகுதியான ரசுவதி - கெருங் எல்லைப் பகுதி வழியாக வர்த்தகப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. சீன எல்லைப் பகுதிகளில் பெய்த பனிப்பொழிவின் காரணமாக இப்பகுதி கடந்த ஜூலை மாதத்திற்கு முன்பாகவே ஆறு மாதங்கள் வரை மூடப்பட்டிருந்தது. 

ஆறுமாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நேபாள நாட்டைசேர்ந்த ஊழியருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனிடையே மூன்று வாரங்களுக்கு பிறகு ரசுவகதி-கெருங் எல்லைப்பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி வழியாக சீனாவிலிருந்து மருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் கரோனா பெருந்தொற்று காலம் முடியும்வரை ஊழியர்களுடன் நேரடித்தொடர்பை முற்றிலும் தவிர்க்கும் வகையில் வர்த்தகப் பொருள்களை அனுப்பிவைப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எல்லைப்பகுதி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட மற்றொரு எல்லைப் பகுதியான தடோபனி-ஜாங்மு பகுதியும் தற்போது மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT