முகப்பு
உலகம்

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஜாமீன் மறுப்பு

லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 2:08 am IST
பகிர்:


லண்டன்: லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

முன்னதாக, ரகசியங்களை வேவு பாா்த்த வழக்கில் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அந்த நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

எனினும், அதுதொடா்பாக இறுதி முடிவு எடுக்கும் வரை அவா் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Advertisement

பாலியல் வழக்கு தொடா்பாக லண்டனில் 2010-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அசாஞ்சே, 2012-ஆம் ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்து ஈக்வடாா் தூதரகத்தில் தஞ்சமடைந்தாா்.

எனினும், 2019-ஆம் ஆண்டில் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவரை, ஜாமீன் நிபந்தனை மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.