உலகம்

பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 3,693 பேர் பலி

DIN


பிரேசிலியா: பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 93,317 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் தொற்றுபாதித்த  3,693 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரேசிலில் கரோனாவுக்கு 3,647 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,48,934 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு ஒரேநாளில் புதிதாக 89,090 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,33,75,414  ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஏழு நாள்களில் மட்டும் சராசரி தினசரி இறப்பு எண்ணிக்கை 2,930 ஆக உயர்ந்துள்ளது, இது உலகிலேயே அதிகமாகும்.

இருப்பினும், தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சாவோ பாலோ மற்றும் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இதுவரை, மொத்த மக்கள் தொகையில் 10.47 சதவீதம் பேருக்கு அதாவது  2,21,70,108 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT