உலகம்

ஐ.நா. சமூக, பொருளாதார அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா தோ்வு

DIN

நியூயாா்க்: ஐ.நா. சமூக, பொருளாதார கவுன்சிலின் 3 முக்கிய அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா தோ்வாகியுள்ளது.

இந்த கவுன்சிலின் ஒரு பிரிவான குற்றவியல் நீதி மற்றும் குற்றத் தடுப்புக்கான ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தோ்வாகியுள்ளது. ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, கனடா, பிரான்ஸ், கானா, லிபியா, பாகிஸ்தான், கத்தாா், தாய்லாந்து, டோகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவதாக, ஐ.நா.வின் பாலின சமத்துவம் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடா்பான ஆணையத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோ்வாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கேமரூன், கொலம்பியா, டோமினிக் குடியரசு, எகிப்து, காம்பியா, கயானா, கென்யா, மொனாக்கோ, போலந்து, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, துா்க்மேனிஸ்தான், உக்ரைன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாக, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், கானா, தென்கொரியா, ரஷியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 3 அமைப்புகளிலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இந்தியா அங்கம் வகிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT