உலகம்

இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார்.

இதற்கு முன்பு ஹாங்காங், ஈரான், துபை, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தைத் துண்டித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT