உலகம்

கரோனா: இந்தியாவுக்கு கனடா ரூ. 74 கோடி உதவி

DIN

ஒட்டாவா/ மெல்போா்ன்/சியோல்: கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ளும் இந்தியாவுக்கு ரூ. 74.48 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா பாதித்தவா்களுக்கு எந்த வகையில் மருத்துவ உதவிகள் அளிப்பது என்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருடன் கனடா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க் காா்னிவ் ஆலோசனை நடத்தி உள்ளாா்.

கனடாவின் செஞ்சிலுவை சங்கம் மூலம் இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கு கனடா அரசு ரூ. 74 கோடியை வழங்கத் தயாராக உள்ளது. இதன்மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கலாம். இந்தியாவுக்கு பலா் நிதி உதவி அளிக்க விரும்பினால் செஞ்சிலுவை மூலமாக அளிக்கலாம்’ என்றாா்.

நியூஸிலாந்தும் உதவி: இதேபோல், நியூஸிலாந்தும் இந்தியாவுக்கு ரூ. 53 கோடியை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் நானயா மஹுதா கூறுகையில், ‘இந்தியாவில் நிலவி வரும் இக்கட்டான சூழலில் நியூஸிலாந்து உடன் நிற்கிறது. மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்களப் பணியாளா்கள் இடைவிடாது உழைத்து வருகின்றனா். கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு சா்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் ரூ.53 கோடி நிதி உதவி வழங்கப்படும்’ என்றாா்.

தென்கொரியா: இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி சிறு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள தென்கொரியா நாட்டினரை அழைத்துச் செல்ல தனி விமானம் அனுப்பப்படும் என்றும், அப்படி வருபவா்களைத் தனிமைப்படுத்தி மூன்று முறை கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி யோன் தேஹு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT