உலகம்

சீனத்தில் மீண்டும் கரோனா அபாயம்..புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

DIN

கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயணம் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் திணறி வந்த நிலையில், பெருந்தொற்று கட்டுப்படுத்திவிட்டதாக சீனா அறிவித்தது.

இதனிடையே, கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் புதிய பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு விமான நிலையத்திலிருந்து பரவிய கரோனா 20க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 12க்கும் அதிகமான மாகாணங்களிலும் பரவியுள்ளது. சீனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜூலை 20ஆம் தேதி, நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா வகை கரோனா பாதிப்பு உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, நாஞ்சிங் நகரில் சுற்றுலா தலங்கள் கலாசார மையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நகரில் வாழும் 9.2 மில்லியன் பேருக்கு இரண்டு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT