முகப்பு
உலகம்

நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
கோப்புப்படம்
பகிர்:

நிகோபார் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
நிகோபார் தீவுகளில் இன்று பிற்பகல் 1.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் சுமார் 150 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னதாக நேற்று அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்பெல் பே பகுதியில் 5.6 அலகு நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →