உலகம்

சிங்கில் டோஸ் தடுப்பூசியுடன் களமிறங்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன்...அனுமதிக் கோரி விண்ணப்பம்

DIN

தாங்கள் தயாரித்த சிங்கில் டோஸ் தடுப்பூக்கு அனுமதி கோரி விண்ணப்பத்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி தயாரிப்பதை மேலும் தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒரு தவணை தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது

இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ஒரு தவணை தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடட் இந்திய அரசிடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது.

இந்திய மக்களுக்கும் உலகத்திற்கும் ஒரு தவணை தடுப்பூசியை வழங்குவதில் முக்கிய மைல்கல்லாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. பயோலாஜிக்கல் இ லிமிடட் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறோம்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை உலகம் முழுவதும் விற்பனை செய்ய எங்களின் விநியோக சங்கலியில் பயோலாஜிக்கல் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. பல அரசுகள், சுகாதார நிறுவனங்கள், கவி, கோவேக்ஸ் போன்ற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட பயோலாஜிக்கல் நிறுவனம் புரிந்துவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT