ஆப்கானிஸ்தான் அரசின் ஊடகப் பிரவு தலைவரை தலைநகர் அருகே உள்ள மசூதியில் வைத்து தலிபான்கள் சுட்டு கொன்றுள்ளனர்.
தலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்படை தாக்குதலை ஆப்கானிஸ்தான் அரசு அதிகரித்தது. இதற்கு பதிலடி தரும் நோக்கில் அரசின் மூத்த அலுவலர்கள் கொல்லப்படுவார்கள் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசின் ஊடகப் பிரவு தலைவரான தாவா கான் மேனாபாலை காபூல் அருகே உள்ள மசூதியில் வைத்து தலிபான்கள் சுட்டு கொன்றுள்ளனர். கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு, காபூலில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போர் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மிர்வைஸ் ஸ்டானிக்ஜாய் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் நாட்டுப்பற்று மிக்க ஆப்கனை கொன்றுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.