உலகம்

கியூபா: 5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

DIN

கியூபாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 8,312 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,00,216-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 85 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,842-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, கியூபாவில் 4,52,286 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 44,088 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 473 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT