உலகம்

ஆப்கனில் இருந்து இதுவரை 3,200 பேர் மீட்பு: அமெரிக்க ராணுவம் தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றியுள்ளனர். மேலும் தலிபான்கள், அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில்ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதில், நேற்று மட்டும் 13 விமானங்களில் 1,100 பேர் காபூலில் இருந்து அமெரிக்கா அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த விமானங்களில் 12 சி-17 விமானங்கள், ஒரு சி -130 விமானம் ஆகும். 

இதனிடையே இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT