இஸ்ரேல் : கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்  
உலகம்

இஸ்ரேல் : கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள் 

இஸ்ரேல் நாட்டில் கரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை கடுமையாக மாற்றி வருகிறார்கள்.

DIN

இஸ்ரேல் நாட்டில் கரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை கடுமையாக மாற்றி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் அந்நாட்டு அரசாங்கம் கரோனாவால் பெரிதாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வருவதை தடை செய்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு 'க்ரீன் பாஸ்' என்னும் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த அட்டை இருந்தால் மட்டுமே வணிக வளாகங்கள், பூங்காக்கள் , உணவகங்கள் , நீச்சல் குளங்கள் , உடற்பயிற்சி கூடங்கள் , கலாச்சார விழாக்கள் போன்றவற்றிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட  கரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கே இந்த 'க்ரீன் பாஸ்' வழங்கப்படுகிறது .

பாஸ் கிடைக்காதவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் எடுத்த கரோனாவால் பாதிப்படையவில்லை என்கிற சான்றிதழ்களை காண்பித்து அந்த இடங்களுக்குள்  நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . 

மேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடனே பொது இடத்தில் கூட வேண்டும் எனவும்  அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT