ஹைட்டி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,207 ஆக உயர்வு 
உலகம்

ஹைட்டி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,207 ஆக உயர்வு

ஹைட்டியில் கடந்த ஆகஸ்ட்-15 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2,207 -ஆகவும்     காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,268 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

DIN

ஹைட்டியில் கடந்த ஆகஸ்ட்-15 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2,207 -ஆகவும்     காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,268 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் ஆகஸ்ட்-15 ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன. அதில் வசித்த ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினா். உயிரிழந்தவா்களின் உடல்கள், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில்   நிலநடுக்கத்தால் 2,207 போ் உயிரிழந்ததாகவும் 12,268-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும்  அந்நாட்டு அரசு அறிவித்திருந்திருக்கிறது.

மேலும் இந்நிலநடுக்கத்தால் சேதாரமான 77,000 கட்டடங்களில் 53,000 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT