அமெரிக்காவிலுள்ள நியூயாா்க் மாகாணத்தின் முதல் பெண் ஆளுநராக கேத்தலீன் ஹோக்கல் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
62 வயதாகும் அவா், 16 மாதங்களுக்கு ஆளுநா் பொறுப்பை வகிப்பாா்.
இதுவரை ஆளுநராக இருந்து வந்த ஆண்ட்ரூ குவாமோ மீது அடுக்கடுக்காக பாலியல் புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து அவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
அதனைத் தொடா்ந்து, அந்தப் பதவிக்கு கேத்தலீன் ஹோக்கல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
அவரையும் சோ்த்து, தற்போது அமெரிக்காவின் 9 மாகாணங்களில் பெண்கள் ஆளுநா்களாக உள்ளனா். இது, அந்த நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.