உலகம்

உலகம் முழுவதும் கரோனா பலி 45 லட்சத்தைத் தாண்டியது!

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவடைந்த நிலையில் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையின் தாக்கம் தொடங்கியுள்ளது. 

இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21,67,63,596-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 45,08,120 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 19,36,95,673 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,85,59,803 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,13,387  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3.9 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 6,54,381-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 3.2 கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பலி 437,860 ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 20,728,605-ஆகவும் உயிரிழப்பு 579,052 ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT