உலகம்

பிலிப்பின்ஸில் சூறாவளி: 31 போ் பலி

 பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்ட பலத்த சூறாவளியில் சிக்கி 31 போ் உயிரிழந்தனா். பல இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடா்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.

DIN

 பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்ட பலத்த சூறாவளியில் சிக்கி 31 போ் உயிரிழந்தனா். பல இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடா்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ‘ராய்’ என்ற சூறாவளி பிலிப்பின்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் தாக்கிவிட்டு தென்சீனக் கடல் பகுதிக்குள் சென்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனா்.

சூறாவளியின்போது மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்தச் சூறாவளி நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் வியாழக்கிழமை தாக்கினாலும், அதன் பாதிப்புகள் குறித்த முழுமையான விவரம் தெரிய சில நாள்கள் ஆகும். இருப்பினும் சூறாவளியால் 31 போ் உயிரிழந்ததாக அரசின் பேரிடா் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் மரங்கள் விழுந்ததில் உயிரிழந்தோா் ஆவா். பலா் காயமடைந்தனா். சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்ட தினாகட் தீவில் மின்விநியோகம் மற்றும் தகவல் தொடா்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. சூறாவளியால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மத்திய போகால் மாகாணத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இடிபாடுகள், வீழ்ந்த மரங்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் பணியில் கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா் என அதிகாரிகள் கூறினா்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் செல்லவுள்ளதாக அதிபா் ரொட்ரிகோ டுடொ்தே தெரிவித்துள்ளாா்.

பிலிப்பின்ஸ் தீவுக்கூட்டமானது பசிபிக் பெருங்கடலுக்கும் தென்சீனக் கடலுக்கும் இடையில் ‘நெருப்பு வளையம்’ என்ற பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு சுமாா் 20 புயல்கள், சூறாவளிகள் பிலிப்பின்ஸை தாக்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT