உலகம்

உலகளவில் கரோனா பாதிப்புகள் 11 சதவிகிதம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

DIN


உலகளவில் முந்தைய வாரத்தைக் காட்டிலும் கடந்த வாரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 20-26 வரை 49.9 லட்சம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் 50 சதவிகிதத்துக்கும் மேல் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன. எனினும், முந்தைய வார பாதிப்பு எண்ணிக்கைகளைக் காட்டிலும், கடந்த வாரம் 3 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளன.

அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. இதன்படி, அமெரிக்க கண்டங்களில் மட்டும் 39 சதவிகிதம் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 34 சதவிகிதம் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஆப்பிரிக்காவில் 7 சதவிகிதம் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. 

அதேசமயம், கரோனா உயிரிழப்புகள் உலகளவில் 4 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT