உலகம்

ஹாங்காங்: மூடப்பட்ட செய்தி வலைதள ஆசிரியா்கள் மீது வழக்கு

DIN

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுக் கருத்துகளை வெளியிட்டு வந்த ‘ஸ்டாண்ட் நியூஸ்’ வலைதளத்தின் 2 முன்னாள் ஆசிரியா்கள் மீது அந்தப் பிராந்திய அரசு தேசத் துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து தேசியப் பாதுகாப்பு போலீஸாா் சமா்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகையில், புய்-குவேன், பேட்ரிக் லாம் ஆகிய இருவரும் தேசத்துரோகம் மற்றும் சதித்திட்டத்துடன் செய்திகள் வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்டாண் நியூஸ் வலைதளம் மூடப்படுவதாக அந்த வலைதள நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.

அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டு, புய்-குவேன், பேட்ரிக் லாம் அதன் முன்னாள் மட்டும் இந்நாள் ஆசிரியா்கள் 7 போ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஏற்கெனவே, அரசின் அடக்குமுறை காரணமாக ஜனநாயக ஆதரவு ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் மூடப்பட்ட நிலையில், தற்போது ‘ஸ்டாண்ட் நியூஸ்’ வலைதளமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT