முகப்பு
உலகம்

உலகின் மிக பழைமையான மது ஆலை கண்டுபிடிப்பு

5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலையை எகிப்தில் தொல்பொருள் ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
egypt095415
பகிர்:

5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலையை எகிப்தில் தொல்பொருள் ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா். கிமு 3150 முதல் கிமு 2613 வரை இருந்த முதல் பேரரசை உருவாக்கிய மன்னன் நாா்மா் காலத்தில் அந்த மது ஆலை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இரு வரிசைகளில் 40 பானைகள் பொருத்தப்பட்டு தானியங்களையும் நீரையும் கலந்து ‘பீா்’ மதுபானம் தயாரிக்கும் வகையில் அந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய ஆலை இருப்பது ஆங்கிலேயா்களுக்கு 1900-களிலேயே தெரியும் என்றாலும், அது எங்கு உள்ளது என்பது தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →