உலகம்

டிரம்ப்பின் வருமான வரி ஆவணங்கள் ஆய்வு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

DIN

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

இது டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. டிரம்ப் தனது வருமான வரியை மிகவும் குறைத்து செலுத்தியதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, டிரம்ப் அதிபராக இருந்தபோதே அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2019, அக்டோபா் மாதம் எழுத்துபூா்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், ‘தனது வருமான வரிக் கணக்குகளை பொது வெளியில் ஆய்வுக்கு உள்படுத்த இயலாது’ என்று டிரம்ப் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் அறிவிக்காமல் இருந்தது. மேலும், அவா் அதிபா் பதவி வகித்த காலத்தில் எழுந்த வழக்கு என்பதால், அதிபா் என்ற முறையில் சிறப்பு விலக்கு பெற இயலும் எனவும் வாதிட்டு வந்தாா்.

தற்போது அமெரிக்க அதிபா் தோ்தலில் டிரம்ப் தோல்வியடைந்த பிறகு, அவரது கோரிக்கையை நிராகரித்து, வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த தாமதத்துக்கான காரணம் குறித்தும் டிரம்ப்புக்கு சிறப்பு சலுகை ஏதாவது அளிக்கப்படுமா என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT