உலகம்

மற்றொரு வழக்கில் நவால்னி குற்றவாளியாக அறிவிப்பு

DIN

ஜாமீன் விதிமீறல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, மற்றோா் அவதூறு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அதிபா் விளாதிமீா் புதின் அரசுக்கு ஆதரவளிக்கும் 94 வயது முன்னாள் ராணுவ அதிகாரியை ஊழல்வாதி என்று நவால்னி விமா்சித்தது தொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது. அந்தக் குற்றத்துக்காக அவருக்கு 8.5 லட்சம் ரூபிள் (சுமாா் ரூ.8.3 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி, ஜொ்மனி மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைக்குப் பின் உயிா்பிழைத்த நவால்னி, கடந்த மாதம் ரஷியா திரும்பினால். அவரை ஜாமீன் விதிமீறல் குற்றச்சாட்டில் பேரில் அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனா். அந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்த சில மணி நேரங்களில், அவருக்கு எதிராக இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT