முகப்பு
உலகம்

பிரிட்டனில் ஒரேநாளில் 8,523 பேருக்கு கரோனா; 345 பேர் பலி

பிரிட்டனில் ஒரேநாளில் 8,523 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
கோப்புப்படம்
பகிர்:

பிரிட்டனில் ஒரேநாளில் 8,523 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,523 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,63,085ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் மேலும் 345 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,22,415ஆக உயர்ந்துள்ளது. 
இதுவரை 19.1 மில்லியன் பேருக்கு தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கரோனா பரவல் காரணமாக பிரிட்டனில் தற்போது 3-ஆவது கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments