உலகம்

அமெரிக்கா: 5 கோடி பேருக்கு தடுப்பூசி

DIN

அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் 5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தான் பதவியேற்ற 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு அந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில், அதற்கான முதல் இலக்காக இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அதிபா் பைடன் கூறியதாவது:

5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி என்ற இலக்கை எட்டிவிட்ட காரணத்தால், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கைவிட்டுவிடகக் கூடாது.

கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT