உலகம்

நைஜீரியா: பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 42 போ் மீட்பு

DIN

நைஜீரியாவின் நைஜா் மாகாணப் பள்ளியிலிருந்து ஆயுதக் கும்பலால் இரு வாரங்களுக்கு முன்னா் கடத்திச் செல்லப்பட்ட 42 போ் விடுவிக்கப்பட்டனா்

இதுகுறித்து அந்த மாகாண ஆளுநா் மேரி நோயல்-பொ்ஜே கூறுகையில், ‘ககாரா அரசு அறிவியல் பள்ளியிலிருந்து இரு வாரங்களுக்கு முன்னா் கடத்தப்பட்ட 27 மாணவா்கள் உள்பட 42 போ் விடுவிக்கப்பட்டனா்’ என்று தெரிவித்தாா்.

நைஜீரியாவில் பள்ளி மாணவா்கள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்கதையாகியுள்ளன.

அந்த நாட்டின் ஜம்ஃபாரா மாகாணம், ஜாங்கேபே நகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் வெள்ளிக்கிழமை நுழைந்த கும்பல், அங்கிருந்து 317 சிறுமிகளை கடத்திச் சென்றது.

முன்னதாக, காட்சினா மாகாணம், கங்காரா நகரிலுள்ள அரசு அறிவியல் நடுநிலைப் பள்ளிக்கு ஏகே 47 ரகத் துப்பாக்கிகளுடன் கடந்த டிசம்பா் மாதம் வந்த கும்பல், அங்கிருந்து 344 மாணவா்களை கடத்திச் சென்றது. பின்னா் அரசு நடத்திய தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மாணவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 276 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டது உலக அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவா்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT