உலகம்

பிரான்ஸில் புதிய வகை கரோனாவின் முதல் பாதிப்பு பதிவு

DIN

பிரான்ஸ் நாட்டில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிக்கு புதிய வகை கரோனா வைரஸின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் இத்தகைய புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் மத்தியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரான்ஸ் வந்த பயணி ஒருவருக்கு தற்போது புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய வகை கரோனாவின் முதல் பாதிப்பை பிரான்ஸ் பதிவு செய்துள்ளது. 

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT