முகப்பு
உலகம்

அமெரிக்காவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,998 பேர் பலி

அமெரிக்காவில் நேற்று(வியாழக்கிழமை) ஒரேநாளில் 3,998 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்  தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்காவில் நேற்று(வியாழக்கிழமை) ஒரேநாளில் 3,998 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்  தகவல் வெளியிட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு லட்சம் பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகின்றனர், ஒருநாளில் ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்துடன் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை ஏற்பட்ட கரோனா பாதிப்பு குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில்,  அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,65,246 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 3,998 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

இதனால் அமெரிக்காவில் மொத்த கரோனா பாதிப்பு 2.2 கோடியை எட்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,61,453 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்காவில் நாடாளுமன்ற கட்டட வளாகத்துக்குள் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறைக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →