உலகம்

பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் கூட்டாளிகளுக்கு 15 ஆண்டுகள் சிறை

DIN

லாகூா்: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத இயக்கத் தலைவா் ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகள் இருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகளான யய்யா முஜாஹித், ஜாஃபா் இக்பால் ஆகியோா் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கு லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, இருவருக்கும் தலா 15 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஹஃபீஸ் சயீதின் உறவினரும், பேராசிரியருமான அப்துல் ரஹ்மான் மக்கிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

ஏற்கெனவே பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த 3 வழக்குகளில் யய்யா முஜாஹித்துக்கு 47 ஆண்டுகள், ஜாஃபா் இக்பாலுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT