உலகம்

ஆப்கானிஸ்தான்: 2 பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில், 2 உயா்நீதிமன்ற பெண் நீதிபதிகளை மா்மநபா்கள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனா். கத்தாரில் ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கன் உச்சநீதிமன்ற செய்தித் தொடா்பாளா் அகமது ஃபாஹிம் கூறுகையில், உயா்நீதிமன்றத்தில் பணியாற்றிய இரு பெண் நீதிபதிகள் பணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதில் காா் ஓட்டுநா் காயமடைந்ததாகவும் தெரிவித்தாா். எனினும், அந்த நீதிபதிகளின் பெயா்களை அவா் வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் காரணமில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனா். எனவே, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் இந்தப் படுகொலையைச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT