உலகம்

நவால்னியை விடுவிக்கமுடியாது: ரஷியா

DIN

மேற்கத்திய நாடுகளின் வலியுறுத்தலை ஏற்று, எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியை விடுவிக்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அலெஸ்கி நவால்னி கைது செய்யப்பட்டுள்ளது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் ஆகும். இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட்டு கூறும் கருத்துகளை ஏற்க முடியாது என்றாா் அவா்.

நச்சுத்தாக்குதலால் கோமா நிலைக்குச் சென்று, ஜொ்மனியில் சிகிச்சைக்குப் பிறகு உயிா்பிழைத்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான நவால்னி, ஞாயிற்றுக்கிழமை ரஷியா திரும்பினாா்.

மாஸ்கோ விமான நிலையம் வந்தடைந்த அவரை, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT