உலகம்

லிபியா: படகு விபத்தில் 43 அகதிகள் பலி

DIN


லிபியா: படகு விபத்தில் 43 அகதிகள் பலி லிபியா அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்புகள் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லிபியா தலைநகா் திரிபோலிக்கு மேற்கே உள்ள கடற்கரை நகரான ஸவைய்யாவிலிருந்து அகதிளை ஏற்றிச் சென்ற படகு, சில மணி நேரத்தில் கவிழ்ந்தது. அந்தப் படகின் என்ஜின் நின்றுபோனதால் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் 43 அகதிகள் உயிரிழந்தனா்; 10 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

இந்த ஆண்டில் மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் உயிரிழந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதே போன்ற ஏராளமான விபத்துக்கள் கடந்த ஆண்டில் நடந்தன என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான கொள்கையால் மீட்புக் கப்பல்கள் விபத்துப் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, விபத்தில் அதிகம் போ் உயிரிழந்ததற்குக் காரணம் என்று அகதிகள் நல ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT