உலகம்

ம. ஆப்பிரிக்க குடியரசில் அவசரநிலை அறிவிப்பு

DIN

மத்திய ஆப்பிரிக்க குடியரசு (சிஏஆா்) நாட்டில் அரசுக்கும் கிளா்ச்சிப் படையினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் அண்மையில் நடந்த அதிபா் தோ்தலில் ஃபாஸ்டின்-ஆா்சங்கே டூவடேரா மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில், அரசைக் கவிழ்ப்பதற்காக தலைநகா் பாங்கியின் புகா் பகுதியில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் நடத்திய தாக்குதலை ஐ.நா. அமைதிப் படையினா் முறியடித்தனா். இந்தச் சூழலில் 15 நாள்களுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT