நைஜீரியாவில் கடுனா மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மாணவர்களில் 28 பேரை காவல்துறை மீட்டுள்ளது. எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க வந்த மாணவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
மொத்தம் 150 பேர் கடத்தப்பட்ட நிலையில் காவல்துறையின் முயற்சியால் 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் நடத்தப்பட்ட 10ஆவது பள்ளிக்குழந்தைகள் கடத்தல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.