உலகம்

போலி வாடகைச் சான்றா? 10 ஆண்டு சிறை, இங்கல்ல, துபையில்!

DIN


போலி வாடகைச் சான்று வழக்கில் கைதானால் 10 வருடம் சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய அரபு நாடுகள் வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர வேண்டுமென்றால், விசாவிற்கு வாடகைச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சமீபகாலமாக விசா பெறுவதற்காக போலிச் சான்றிதழ்கள் அளிப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

துபை நீதிமன்றத்தில், 35 வயதுடைய சிரியா நாட்டைச் சேர்ந்தவர் போலி வாடகைச் சான்றிதழ் சமர்பித்ததாக வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், சிரியா நாட்டை சேர்ந்த இவர், தனது மகனின் விசாவிற்காக போலியாக வாடகைச் சான்றிதழ், மின் இணைப்பு சான்றிதழ், தண்ணீர் வரி சான்றிதழ் உள்ளிட்டைவை தயார் செய்து சமர்பித்தது தூதரக அதிகாரிகளால் கண்டறியப்பட்டது என தெரிவித்தார்.

போலி வாடகைச் சான்றிதழ் சமர்பித்தால் கொடுக்க வாய்ப்புள்ள தண்டனைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் வாகே அமீன் கூறியதாவது,

பல மக்கள் போலி வாடகைச் சான்றிதழை சமர்பித்து விசா பெறுவது சிறிய தவறு என்றும், அவ்வாறு சான்றிதழ் சமர்பிக்கும் போது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால் விசா விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்படும் என நினைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால், துபை சட்டம், பிரிவு 217இன் படி, மோசடி வழக்கில் குறைந்தது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT