உலகம்

ஹைட்டி அதிபர் கொலை: 17 பேர் கைது

DIN

ஹைட்டி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் வெளிநாட்டவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஹைட்டி நாட்டு அதிபராக இருந்த ஜோவனல் மோயிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

மேலும் அதிபர் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட ஹைட்டி நாட்டு காவல்துறை வெளிநாட்டவர்கள் 17 பேரை கைது செய்துள்ளது. 26 கொலம்பியர்கள் மற்றும் 2 அமெரிக்கர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களைக் கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிபர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT