உலகம்

ஒலிம்பிக்குக்கு சிக்கலா? டோக்கியோவில் அதிகரிக்கும் கரோனா தொற்று

DIN

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பது அந்நாட்டு அரசுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டே நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே கரோனா தொற்று பரவலின் மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தாமல் அரசு விளையாட்டு போட்டியில் கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டை எழுப்பினர்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் டோக்கியோவில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டோக்கியோவில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,485 ஆக உள்ள நிலையில் புதன்கிழமை 1149 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்கள் டோக்கியோவிற்கு வருகை புரிந்து வரும் சூழலில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: வேலூர் கடைசி இடம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாமக்கலில் 93.51% தேர்ச்சி!

செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை!

சுவாரஸ்யமான கதை! ஆனால்.. ரசவாதி - திரை விமர்சனம்!

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

SCROLL FOR NEXT