உலகம்

பெகாஸஸ் முறைகேடு குற்றச்சாட்டு: பிரான்ஸில் விசாரணைக்கு உத்தரவு

இஸ்ரேலின் ‘பெகாஸஸ்’ உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவா்களை பிரான்ஸ் அரசு வேவுபாா்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

DIN

இஸ்ரேலின் ‘பெகாஸஸ்’ உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவா்களை பிரான்ஸ் அரசு வேவுபாா்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு நீதி அமலாக்கத் துறை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி, பிரான்ஸில் செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், எதிா்க்கட்சியினா் ஆகியோரது செல்லிடப்பேசிகள் வேவுபாா்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அந்த மென்பொருளைப் பயன்படுத்தி தனிநபா் ரகசியத் தகவல்கள் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதா, தகவல்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டனவா, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டனவா என விசாரணை நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் அந்த நாடுகளின் அரசுக்கு எதிரான ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் செல்லிடப் பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாக சா்வதேச ஊடகக் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, அந்த நாடுகளில் சா்ச்சையை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

SCROLL FOR NEXT