ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரேநாளில் 783 பேர் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,704 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,704 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,704 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,30,240 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கரோனாவால் இன்று 783 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,50,705 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 4,74,738 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 22,584 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆக 54,04,797 உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.