உலகம்

பெகாசஸ் விவகாரம்: அதிரடி காட்டும் இஸ்ரேல்

பெகாசஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள இஸ்ரேலில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

DIN

பெகாசஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள இஸ்ரேலில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஒ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பெகாசஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற வெளியுறவுத்துறை விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கான தலைவர் ராம் பென் பார்க் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பல்வேறு குழுக்களை கொண்டு பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. விசாரணை முடிந்தவுடன் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடைபெற்றால் திருப்தியே என என்எஸ்ஒ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஷாலிவ் ஹுலியோ தெரிவித்துள்ளார்.  இஸ்ரேல் சைபர் நிறுவனங்களின் பெயரை கெடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT