முகப்பு
உலகம்

ரஷியாவில் ஒருநாளில் 796 பேர் கரோனாவுக்குப் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,471 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 796 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,471 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 796 பேர் பலியாகியுள்ளனர். 

ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,471 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,54,711 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,287 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கரோனாவால் இன்று 796 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,51,501 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 4,75,753 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 22,660 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆக 5,427,457 உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.