மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு 
உலகம்

மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு

தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

PTI


தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நாடு கடத்த ஆன்டிகுவா நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை இந்தியா அழைத்துவர சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டுக்குச் சென்றுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா். இருவரையும் இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே 23-ஆம் தேதி ஆன்டிகுவாவில் இருந்து மெஹுல் சோக்ஸி காணாமல் போனாா்.

அண்டை நாடான டொமினிக்காவில் தனது தோழியுடன் இருந்தபோது அவா் பிடிபட்ட நிலையில், அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான வழக்கு டொமினிக்கா நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், பிணையில் விடுவிக்கப்பட்டாலும், இங்கிருந்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்வேன் என்று சோக்ஸி தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏற்க முடியாததாலும், பிணையில் விடுதலை செய்ய முடியாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணையில், மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை இந்தியா அழைத்துவர சிபிஐ டிஐஜி தலைமையில் அந்த அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டுக்குச் சென்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT