உலகம்

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை: தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 

DIN


ஜோஹன்ஸ்பர்க்: பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரூ.60 லட்சம் பண மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு 2015-ஆம் ஆண்டு முதல் டர்பன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.  அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT