உலகம்

ஈரான்: துருக்கியுடனான எல்லை மீண்டும் திறப்பு

DIN

கரோனா நெருக்கடி காரணமாக கடந்த 14 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஈரான் - துருக்கி எல்லைப் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது. இதுகுறித்து ஈரான் அரசுக்குச் சொந்தமான இஸ்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

துருக்கிக்கும் ஈரானுக்கும் இடையிலான காபிகோ-ராஸி எல்லைப் பகுதி போக்குவரத்து, கரோனா பரவல் அபாயம் காரணமாக கடந்த 14 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சாலை வழி போக்குவரத்து அண்மையில் மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த எல்லை வழியாக, 41 ஈரான் பெண் தொழிலதிபா்கள், கலைஞா்கள் அடங்கிய குழு துருக்கியிலுள்ள வேன் நகருக்குச் சென்றது. அந்த நகரிலுள்ள ஹோட்டலில் அவா்களுக்கு மலா்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது என்று இஸ்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானில் இதுவரை 30,20,522 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 81,911 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT